தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் மரணமா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!

 

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் மரணமா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்து கொண்டிருப்பினும், பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 மருத்துவர்கள் உயிரிழந்ததை அரசு மறைத்து விட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். அதனை தொடர்ந்து முக ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலினும் அதே தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் மரணமா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!

அந்த பதிவில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் எனச் சொல்லிவிட்டு 25 லட்சமாக அதனை குறைத்திருப்பதாகவும் மருத்துவர், செவிலியர், துப்புரவுப் பணியாளர் என உயிரிழந்தவர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டு அனைவரது குடும்பத்துக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும் அந்த தகவல் உண்மையில்லை என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.