டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு 15 மடங்கு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு 15 மடங்கு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 15 மடங்கு குறைந்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவும். கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பால் சிறிய குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை பலர் உயிரிழந்தனர். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழக்கும் சூழலில், டெங்கு காய்ச்சலும் பரவினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு 15 மடங்கு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

இதனால் அரசு, கொரோனாவுடன் சேர்த்து டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ளவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மக்கள் தங்களது வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தூய்மையான நீரில் தான் டெங்கு கொசு உருவாகும் என்பதால் நீரை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது.

டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு 15 மடங்கு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 மடங்கு குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் டெங்கு நோய்களையும் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.