ஊரடங்கிலும் 52,489 காசநோயாளிகளுக்கு இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை: அமைச்சர் தகவல்!

 

ஊரடங்கிலும் 52,489 காசநோயாளிகளுக்கு இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை: அமைச்சர் தகவல்!

ஊரடங்கு அமலில் இருந்த காலத்திலும் 52,489 காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இத்தனை மாதங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்போம் என எவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கால் மக்கள் வாழ்வதாரத்தை இழந்து பல இன்னல்களுக்கு உள்ளானார்கள். மக்கள் மட்டுமில்லாமல் அரசுக்கும் கடும் நிதி நெருக்கடி நிலவியது. அதே போல சிகிச்சை அளிக்க இடம் இல்லமால் பள்ளிகள் கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.

ஊரடங்கிலும் 52,489 காசநோயாளிகளுக்கு இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை: அமைச்சர் தகவல்!

இதனிடையே புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அரசு தவறவில்லை. மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை இருந்ததாலும் கொரோனா பரவும் அச்சத்தாலும் நோயாளிகளின் வீட்டுக்கே சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சமீபித்தில் ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு காலத்திலும் 52,489 காசநோயாளிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் காசநோயாளிகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.