கல்லூரியில் குவியல் குவியலாக பரிசுப்பொருட்கள்… தேர்தல் விதிகளை மீறிய அமைச்சர் விஜய பாஸ்கர்!

கல்லூரியில் குவியல் குவியலாக பரிசுப்பொருட்கள்… தேர்தல் விதிகளை மீறிய அமைச்சர் விஜய பாஸ்கர்!

தமிழக தேர்தல் அறிவிப்பை பிப்ரவரி 26ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அறிவித்த 2 மணி நேரங்களுக்குப் பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் என்றும் தெரிவித்தார். நடத்தை விதிமுறைகள் அமலானதோ இல்லையோ அன்றே ஆளுங்கட்சி ஆட்கள் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டனர். ஊட்டி, வால்பாறை, புதுக்கோட்டையில் அடுத்தடுத்து தேர்தல் விதிகளை மீறி வசமாக சிக்கினர்.

கல்லூரியில் குவியல் குவியலாக பரிசுப்பொருட்கள்… தேர்தல் விதிகளை மீறிய அமைச்சர் விஜய பாஸ்கர்!

குறிப்பாக வால்பாறையில் மூன்று வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல அமைச்சர் விஜய பாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

கல்லூரியில் குவியல் குவியலாக பரிசுப்பொருட்கள்… தேர்தல் விதிகளை மீறிய அமைச்சர் விஜய பாஸ்கர்!

இச்சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சி குமாரிடம் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தேர்தல் விதிகளை மீறி விராலிமலை தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, தட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார். மேலும், மேட்டுசாலையில் உள்ள அவரது கல்லூரியில் இலவச பொருட்களைப் பதுக்கி வைத்துள்ளார். எனவே, இலவச பொருட்கள் விநியோகத்தை தடுத்து நிறுத்துவதோடு, பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.