‘வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை, பாரத் பந்த் தேவையற்றது’: அமைச்சர் வேலுமணி

 

‘வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை, பாரத் பந்த் தேவையற்றது’: அமைச்சர் வேலுமணி

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

நாகையில் ரூ.34.30 கோடி மதிப்பில் சிறு மீன்பிடிக்கும் துறைமுகம் அமைக்கும் பணி குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார். அதில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கலந்து கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையை அவர்களே நிர்ணயித்து நேரடியாக விற்பனை செய்வதற்கும், இடைத்தரகர்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் வேளாண் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை, பாரத் பந்த் தேவையற்றது’: அமைச்சர் வேலுமணி

தொடர்ந்து இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த அவர், பாரத் பந்த் தேவையற்றது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும், பந்த்துக்கு ஆதரவு அளிக்கும் திமுக வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது என சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.