“திமுகவுக்கு அதிமுக அரசை குறை சொல்ல மட்டும் தான் தெரியும்” – அமைச்சர் காட்டம்!

 

“திமுகவுக்கு அதிமுக அரசை குறை சொல்ல மட்டும் தான் தெரியும்” – அமைச்சர் காட்டம்!

கோவை மாவட்டம் குறித்து கனிமொழி எம்.பி பேசுவது தவறு என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

“திமுகவுக்கு அதிமுக அரசை குறை சொல்ல மட்டும் தான் தெரியும்” – அமைச்சர் காட்டம்!

கோவை பீளமேடு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்,பி கனிமொழி, ‘புனரமைப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டும் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. நொய்யல் ஆறு மிக மோசமாக இருக்கிறது. கோவை மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணிகளையும் அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை. கோவை வளர்ச்சி அடையாமல் அதிமுகவுக்கு சேர்ந்தவர்கள் மட்டும் வளர்ச்சி அடைந்துள்ளனர்’ என விமர்சித்திருந்தார்.

“திமுகவுக்கு அதிமுக அரசை குறை சொல்ல மட்டும் தான் தெரியும்” – அமைச்சர் காட்டம்!

இந்த நிலையில் கனிமொழியின் கருத்துக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, கோவை மாவட்டம் பற்றி கனிமொழிக்கு தெரியாது. யாரோ எழுதித் தந்ததை பேசுகிறார் என குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, திமுகவுக்கு குறை சொல்ல மட்டுமே தெரியும் எனக்கூறிய அவர், கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ளோம். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நாட்டிலேயே கோவையில் தான் அதிக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்கள், சென்னை மதுரை என முதல்வர் பழனிசாமி மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது’ என்றும் தெரிவித்தார்.