கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமைச்சர்!

 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமைச்சர்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 60 வயதுக்கு தடுப்பூசி போடும் பணி அண்மையில் தொடங்கியது. முதல் நாளிலேயே 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் இதுவரையில் மக்கள் மத்தியில் நீடிப்பதால், அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு முன் உதாரணமாக திகழ்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமைச்சர்!

அந்த வகையில் பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு, அமித்ஷா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பலர் போட்டுக் கொண்டனர். தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் வேலுமணியும் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டதன் சான்றிதழை வழங்கினர்.