“விவசாயி நாட்டை ஆள முடியும் என நிரூபித்தவர் முதலமைச்சர்” – அமைச்சர் வேலுமணி

 

“விவசாயி நாட்டை ஆள முடியும் என நிரூபித்தவர் முதலமைச்சர்” – அமைச்சர் வேலுமணி

கோவை

கிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆள முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வேலுமணி, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தேர்வான 15 மாணவ, மாணவியருக்கு, மருத்துவ படிப்புக்கான சீருடைகளுடன், தலா 25 ஆயிரம் நிதி ரூபாய் வழங்கினார்.

“விவசாயி நாட்டை ஆள முடியும் என நிரூபித்தவர் முதலமைச்சர்” – அமைச்சர் வேலுமணி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார் என தெரிவித்தார். மேலும், முதலமைச்சர், கிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆள முடியும் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்த நிலையிலும், மக்களை காப்பதற்காக நேரடியாக செம்பரம்பாக்கம் அணைக்கு சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார்.

“விவசாயி நாட்டை ஆள முடியும் என நிரூபித்தவர் முதலமைச்சர்” – அமைச்சர் வேலுமணி

அத்துடன், கோவை மாவட்டத்தில் அரசு உள்ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர 21 பேர் தேர்வான நிலையில், 15 பேருக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என்றும், மீதமுள்ள 6 பேர் காத்திருப்பில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர் வேலுமணி, 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் போது, விவசாயிகளுக்கு மானிய விலையில் புல் நறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது