முதல்வர் வேட்பாளர் குறித்து பொதுவெளியில் முடிவெடுக்க முடியாது : அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

 

முதல்வர் வேட்பாளர் குறித்து பொதுவெளியில் முடிவெடுக்க முடியாது : அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக  முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.  இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேற்று  ஆலோசனை நடத்தினர்.

முதல்வர் வேட்பாளர் குறித்து பொதுவெளியில் முடிவெடுக்க முடியாது : அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

இந்நிலையில் சென்னை திருவிக நகர் மண்டலத்தில் அயனாவரத்தில் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ” அதிமுக கட்சி ஒற்றுமையுடன் உள்ளது. எங்களுக்குள் குழப்பம் இல்லை. அதிமுக முதல்வர் வேட்பாளர் பொதுவெளியில் எடுக்கும் முடிவு அல்ல. அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள். எங்களின் சாதனைகளை எடுத்து கூறி தேர்தலை சந்திப்போம். எங்களின் சாதனையை கூற நிறைய உள்ளது. எதிர்க்கட்சியிடம் சொல்ல என்ன உள்ளது” என்றார்.