நீட் தேர்வால் மாணவி தற்கொலை: அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று ஆறுதல்!

 

நீட் தேர்வால் மாணவி தற்கொலை: அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று ஆறுதல்!

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருக்கு அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று காலை தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த் அவர், இந்த ஆண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தான் தற்கொலை செய்து கொண்டதாக செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், எல்லரையும் விட்டுச் செல்கிறேன் என கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

நீட் தேர்வால் மாணவி தற்கொலை: அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று ஆறுதல்!

ஏற்கனவே மாணவர் விக்னேஷ் கொரோனாவால் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த மாணவி ஜோதியின் குடும்பத்துக்கு அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு மட்டுமே எதிர்காலம் என மாணவர்கள் கருதக்கூடாது; நீட் விலக்கில் அரசு உறுதியாக உள்ளது என்றும் மாணவர்கள் நீட் தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.