‘ஜெயலலிதா லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல செயற்குழு கூட்டம்’: அமைச்சர் உதயகுமார்

 

‘ஜெயலலிதா லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல செயற்குழு கூட்டம்’:  அமைச்சர் உதயகுமார்

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என தொண்டர்கள் எதிர்பார்ப்பு காத்து கிடக்கின்றனர்.

‘ஜெயலலிதா லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல செயற்குழு கூட்டம்’:  அமைச்சர் உதயகுமார்

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வடகிழக்கு பருவமழை மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக செயற்குழு கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில் தான் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.

‘ஜெயலலிதா லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல செயற்குழு கூட்டம்’:  அமைச்சர் உதயகுமார்

கடந்த 19 ஆம் தேதி அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனாலும் இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்தா முடிவும் எட்டப்படாததால் நாளை செயற்குழு கூட்டம் கூடுகிறது.