‘தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்’.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

 

‘தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்’.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

அதிமுக 2021 தேர்தலில் வெற்றி பெறும் என அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் மும்முரமாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளன. அதே போல தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே அனைத்து கட்சிகளுக்கு இடையேயும் கூட்டணி பிரச்னை நிலவி வருகிறது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிமுகவுடன் தேமுதிகவும், பாஜகவும் கூட்டணி அமைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

‘தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும்’.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகன், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என கூறினார். மேலும், பாஜக அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதே போல, கூட்டணி குறித்த அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் வெளியாகும் என அறிவித்தார். இருப்பினும் அதிமுக அமைச்சர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இளைஞர்களின் எழுச்சி அதிமுக பக்கமே உள்ளது என்றும் 2021-ல் நடைபெறும் தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்தார்.