மின் கட்டணம் ரீடிங்கில் குளறுபடி என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் : அமைச்சர் தங்கமணி விமர்சனம்

மின் கட்டணம் ரீடிங்கில் குளறுபடி என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் : அமைச்சர் தங்கமணி விமர்சனம்

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக பல தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால், மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மின் கட்டணம் அதிகமாகி இருப்பதாகவும் மக்களிடம் அதிகமாக வசூலிக்கவில்லை என்றும் மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின் கட்டண உயர்வை எதிர்த்து வரும் 21 ஆம் தேதி(நாளை) திமுகவினர் வீட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இதனிடையே மின்கட்டணத்தில் குளறுபடி நடந்துள்ளதாகவும் மின் வாரியம் லாபம் ஈட்டுவதாகவும் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார்.

மின் கட்டணம் ரீடிங்கில் குளறுபடி என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் : அமைச்சர் தங்கமணி விமர்சனம்

இந்த நிலையில் மின் கட்டணம் ரீடிங்கில் குளறுபடி என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், மின் கட்டணம் கூடுதலாக கணக்கீடு என ஸ்டாலின் கூறும் புகாரில் எள்ளளவும் உண்மை இல்லை என்றும் மக்களை திசை திருப்பும் காரியத்தில் ஸ்டாலின் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும், ஸ்டாலின் காண்பித்தது வீட்டு மின்நுகர்வோரின் ஆவணம் இல்லை, தொழில் மின்நுகர்வோரின் ஆவணம் என்றும் தெரிவித்துள்ளார்.