விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்.

விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: அமைச்சர் தங்கமணி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் விவசாயிகளுக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநில அரசு, வேளாண் திட்டங்களை செயல்படுத்தும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் தெளிவுபடுத்தி விட்டார்.,

தமிழகத்தில் தக்கல் முறையில் ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள் ஆறு மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுவிடும்” எனக் கூறினார்.