நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழவில்லை; அதிகாரிகளே இடித்தனர்- அமைச்சர் தங்கமணி

 

நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழவில்லை; அதிகாரிகளே இடித்தனர்- அமைச்சர் தங்கமணி

நாமக்கல்லில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 336 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை நடத்தினார். தொடர்ந்து கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டிட விபத்தில் 2 பேர் படுகாயம், 6 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டடம் இடிந்து விழவில்லை; அதிகாரிகளே இடித்தனர்- அமைச்சர் தங்கமணி

இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான விபத்தினை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, “நாமக்கலில் மருத்துவ கல்லூரியில் கட்டுமான பணியின் போது விபத்து ஏதும் ஏற்படவில்லை, அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, வெல்டிங் விட்டு போனதால் அதிகாரிகளே கட்டிடடத்தை இடித்தனர், அரசு கட்டுமான பணிகளை அதிகாரிகள் தான் ஆய்வு செய்திட வேண்டும். நாமக்கல் எம்.பி அரசியல் விளம்பரத்திற்காக அரசு கட்டுமான ஆய்வு செய்தார். மின் கட்டணம் எக்காரணம் கொண்டும் ஏற்ற பட மாட்டாது, வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை மின் வாரியம் எதிர் கொள்ள தயாராக உள்ளது” எனக் கூறினார்.