• February
    24
    Monday

Main Area

Main



அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி -  அமைச்சர் அதிரடி!

Thanga mani
Thanga mani

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் உள்ள 5200 டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும்.  டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும், வேலையும் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

thangamani

நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் அளிக்கப்பட்டு விடும். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கப்பட்டுள்ளது” என கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.