ஆக்சிஜன் பற்றாக்குறையா? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

 

ஆக்சிஜன் பற்றாக்குறையா? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து பெறக்கூடிய ஆக்சிஜனே போதுமான அளவுக்கு இருந்தது. ஆனால், நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் ஆக்சிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் உயிரிழக்க நேர்ந்தது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின.

ஆக்சிஜன் பற்றாக்குறையா? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

இதனால், பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெரும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டது. மத்திய அரசும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக ஆக்சிஜன் விநியோகம் செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையும் ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. அங்கிருந்தும் ஆக்சிஜன் பெறப்படுகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், மகாராஷ்டிராவில் இருந்து 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னைக்கு வருகிறது. ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 30 டன் ஆக்சிஜன் பெறமுடியும். ஆலை இப்போது தான் திறக்கப்பட்டிருப்பதால் அதிக உற்பத்தி பெற நாட்கள் ஆகும் என்று கூறினார். மேலும் தடுப்பூசி குறித்து பேசிய அவர், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கூடுதலாக கேட்டுள்ளோம். அவை வந்ததும் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.