ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை – அடித்துச் செல்லும் அமைச்சர்!

 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை – அடித்துச் செல்லும் அமைச்சர்!

திமுக ஆட்சியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அச்சமயம் பல உயிர்கள் பறிபோனதை மறைத்து மத்திய அரசு இவ்வாறு தெரிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை – அடித்துச் செல்லும் அமைச்சர்!

இதற்கு விளக்கமளித்த மத்திய இணையமைச்சர், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொடுத்த தரவுகளை வைத்தே அவ்வாறு தான் தெரிவித்ததாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நேர்ந்ததாக அரசுகள் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துவிட்டார். அதாவது, இந்த விவகாரம் மாநில அரசுகளின் மீது திசை திருப்பப்பட்டது. அதில் தமிழகமும் ஒன்று. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லையா? என்ற கேள்வி வலுத்தது.

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர், இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது ஆக்சிஜன் சப்ளை சீராக இருந்ததால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை – அடித்துச் செல்லும் அமைச்சர்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்த ரூ.2.17 கோடி நிதி கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.