கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

 

கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதிய தளர்வுகள் ஏதுமின்றி ஊரடங்கை ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டித்த முதல்வர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அதன் படி சென்னை, கோவை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

இத்தகைய சூழலில், வரும் வாரத்திற்கு புதிதாக தளர்வுகளை அளிக்கலாமா அல்லது கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் 1.2% என்கிற அளவில் கொரோனா பரவல் கட்டுப்பாடாக உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரனோ தொற்று இல்லாத சூழலை கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தினசரி கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் அதிகம் என்று கூறினார்.