8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை திருவான்மியூரில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் திமுக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி கொள்முதல் என அனைத்தையும் துரிதமாக செய்துள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தியை தொடங்க அதிமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசிய அவர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சிறிய அளவில் அதிகரித்துள்ளது. அதிக பாதிப்பு இருக்கும் மாவட்டங்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளது. தொற்று சிறிது அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை. இரண்டு தடுப்பூசிகள் தான் இப்போதைக்கு கொள்முதல் செய்து கொடுக்கப்படுகிறது. பிற தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டால் மக்களுக்கு செலுத்தப்படும் என்று கூறினார்.

ஒரு கோடியே 56 லட்சம் தடுப்பூசிகள் இதுவரை தமிழகத்திற்கு வந்துள்ளன. ஒரு கோடியே 48 லட்சம் பேர் தடுப்பு செலுத்தி கொண்டுள்ளனர். தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசி இரண்டு மூன்று நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். நேற்று ஒரே நாளில் 8 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் வந்தடைந்தன என்றும் தெரிவித்தார். மேலும், திமுக அரசு வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசு என்றும் ஒப்பந்தங்களாக இருந்தாலும் இடமாற்றங்கள் ஆக இருந்தாலும் அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.