திடீரென தொற்று அதிகரிப்பது ஏன்? – ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

 

திடீரென தொற்று அதிகரிப்பது ஏன்? – ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் பாதிப்பின் காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி மஞ்சள் காமாலை பரிசோதனை முகாம் இன்று காலை நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை 103 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்திருப்பதால் அதற்கான காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் மக்கள் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்றதால் பாதிப்பு பெரிய அளவில் அதிகரித்தது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

திடீரென தொற்று அதிகரிப்பது ஏன்? – ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என இனி யாரும் இருக்கக்கூடாது. நாளை கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வை முதல்வர் துவக்கி வைக்கவுள்ளார் என்றார். மேலும், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுவதாகவும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான காலத்தை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.