நீட் தேர்வு இப்போது தான் வந்தது போல ஓபிஎஸ் பேசுகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

 

நீட் தேர்வு இப்போது தான் வந்தது போல ஓபிஎஸ் பேசுகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். தமிழகத்திலுள்ள பிரச்னைகள் குறித்து மோடியிடம் ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்திக்கும் போது நீட் தேர்வை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதிமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு தெரிவித்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது.

நீட் தேர்வு இப்போது தான் வந்தது போல ஓபிஎஸ் பேசுகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல்வரும் பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். பாதிப்பை கண்டறிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வுக்கான பயிற்சியும் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. நீட் தேர்வு இப்போது தான் வந்தது போல ஓபிஎஸ் பேசுகிறார் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை முதன்முதலில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது ஆட்சியில் இருந்த கருணாநிதி நீதிமன்றம் சென்று அதற்கான தடையாணையை பெற்றார். அதே போல, முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுப்பார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? மாணவ சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது யார்? என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அவர் ஏன் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.