“எய்ம்ஸ் பற்றி பேச நீங்கள் வெட்கப்பட வேண்டும்” – அதிமுகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சு!

 

“எய்ம்ஸ் பற்றி பேச நீங்கள் வெட்கப்பட வேண்டும்” – அதிமுகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சு!

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த கட்டுமான படியும் தொடங்கப்படவில்லை. தேர்தலின் போது ‘ஒரே ஒரு செங்கல்லை காட்டி’ அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இது தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியது அனைவரது கவனத்தை ஈர்த்தது.

“எய்ம்ஸ் பற்றி பேச நீங்கள் வெட்கப்பட வேண்டும்” – அதிமுகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சு!

ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசு உறுதியேற்றது. அதன் படி, எய்ம்ஸ் தொடர்பான கோரிக்கையை முன்வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை டெல்லி செல்லவுள்ளார். மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசவுள்ளார். இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த விவாதம் எழுந்தது.

“எய்ம்ஸ் பற்றி பேச நீங்கள் வெட்கப்பட வேண்டும்” – அதிமுகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் மா.சு!

பேரவையில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக நீங்கள் பேசுவதற்கு வெட்கப்படவேண்டும். மருத்துவமனை வளாகத்திற்கு போர்டாவது வைத்துள்ளீர்களா? என்ன தான் செய்தீர்கள்? என்று அதிமுகவினரை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் பல மாநிலங்களில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால் அறிவித்தது முதல் எந்த பணியும் நடைபெறாத மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அவர் தெரிவித்தார்.