கொரோனாவும் அமைச்சர் வேலுமணியும்…தினம் ஒரு டிப்ஸ்!

 

கொரோனாவும் அமைச்சர் வேலுமணியும்…தினம் ஒரு டிப்ஸ்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 15,659 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 81ஆயிரத்து 988ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று 82 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,557ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை தமிழகத்தில் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு முடக்கம் அமலுக்கு வந்தது.இதனால் தமிழகமே நேற்று வெறிசோடி காணப்பட்டது.

கொரோனாவும் அமைச்சர் வேலுமணியும்…தினம் ஒரு டிப்ஸ்!

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவிலிருந்து தப்பிக்க அறிவுரை கூறி வருகிறார். அதன்படி அவர், முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். நம் முன்னோர்கள் கண்ட பாரம்பரிய உணவு முறையை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வோம். நோய்த்தொற்று எதிரியை வெல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சுத்தமான தேனில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
நம் முன்னோர்கள் கண்ட பாரம்பரிய உணவு முறையை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வோம். நோய்த்தொற்று எதிரியை வெல்வோம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை. நாம் அனைவரும் இந்த புதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தொற்று பரவாமல் தடுக்கும் அரசின் முயற்சிக்கு தோள் கொடுப்போம் என்றும் அமைச்சர் வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.