“அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” – அமைச்சர் வேலுமணி

“அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” –  அமைச்சர் வேலுமணி

கோவை

அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வேலுமணி, சுமார் 10.10 கிலோ மீட்டர் தொலைவிலான கோவை – அவினாசி மேம்பால கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

“அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” –  அமைச்சர் வேலுமணி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், கோவையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறிய அமைச்சர் வேலுமணி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

“அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” –  அமைச்சர் வேலுமணி

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி பாசிட்டிவான முதலமைச்சர் எனவும் தெரிவித்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் நடைமுறை படுத்த முடியாத திட்டங்களை அறிவித்து வருவதாக குற்றம்சாட்டி வேலுமணி, 2021ல் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராவார் எனவும் தெரிவித்தார்.