ஆயிரம் பஸ்சுக்கு அனுமதி கேட்ட பிரியங்கா காந்தி….. கொடுத்த யோகி ஆதித்யநாத்…. கடைசியில் அசிங்கப்பட்ட காங்கிரஸ்

 

ஆயிரம் பஸ்சுக்கு அனுமதி கேட்ட பிரியங்கா காந்தி….. கொடுத்த யோகி ஆதித்யநாத்…. கடைசியில் அசிங்கப்பட்ட காங்கிரஸ்

உத்தரப்பிரதேசத்தில் லாக்டவுனால் வேலைவாய்ப்பு இல்லாமல் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அரசு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. அதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் சார்பில் ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும். அதற்கான செலவுகளையும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என  உத்தரப்பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். மேலும் ஆயிரம் பஸ்களை இயக்க அனுமதி கோரி மாநில அரசிடம் விண்ணப்பித்து இருந்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசும் அனுமதி கொடுத்தது.

ஆயிரம் பஸ்சுக்கு அனுமதி கேட்ட பிரியங்கா காந்தி….. கொடுத்த யோகி ஆதித்யநாத்…. கடைசியில் அசிங்கப்பட்ட காங்கிரஸ்

அதேசமயம், பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியும் எதிர்பாராத வகையில், ஆயிரம் பஸ்கள் குறித்து விவரங்களை தரும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கேட்டது. உடனே இதுதாங்க நாங்க இயக்கபோகும் 1000 பஸ் விவரங்கள் என ஒரு பட்டியலை உத்தரப்பிரதேச அரசிடம் கொடுத்தது. உடனே காங்கிரஸ் கொடுத்த பஸ்கள் பட்டியல் குறித்து உத்தர பிரதேச அரசு விசாரணை செய்தது. காங்கிரஸ் கொடுத்த பஸ் பட்டியலில், பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் வர்த்தக வாகனங்களாக இருந்தன. இதனையடுத்து உத்தர பிரதேச அரசு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் கேபினட் அமைச்சர் சித்தார்த் நாத் சிங் இது தொடர்பாக கூறியதாவது: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் இயக்கபோவதாக கூறி அவர்கள் அனுப்பிய பஸ்கள் பட்டியலை விசாரணையில் செய்ததில், அதில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் வர்த்தக வாகனங்களாக இருந்தன. இது துரதிருஷ்டவசமானது. நெருக்கடியான இது போன்ற நேரத்தில் இது  போன்ற மோசடிகளை ஏன் அவர்கள் செய்தார்கள்? என்பதற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.