ஆன்லைனில் மது விற்பனை செய்ய திமுக அரசு திட்டமா? – அமைச்சர் விளக்கம்!

 

ஆன்லைனில் மது விற்பனை செய்ய திமுக அரசு திட்டமா? – அமைச்சர் விளக்கம்!

ஆன்லைனில் மது விற்பனை செய்யும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் ஆன்லைன் மதுபானம் விற்பனை கொண்டு வரப்பட உள்ளதாக பத்திரிகையில் வெளியான செய்தியை குறிப்பிட்டு பேசினார். ஆன்லைனில் மது விற்பனை செய்யும் திட்டம் தமிழக அரசுக்கு இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆன்லைனில் மது விற்பனை செய்ய திமுக அரசு திட்டமா? – அமைச்சர் விளக்கம்!

அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆன்லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு ஏப்ரல் 2022 முதல்வர் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 25 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், மது அருந்தலு க்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை திமுக அரசு தீவிரமாக மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக மாவட்டம் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய சுமார் 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.