மின் அலுவலங்களுக்கு நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் விசிட்! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

 

மின் அலுவலங்களுக்கு நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் விசிட்! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

சென்னையில் அவ்வப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் நேற்று 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மின் அலுவலங்களுக்கு நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் விசிட்! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலக கட்டுபாட்டு அறைக்கு சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, அங்கு நிகழும் பணிகளை ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, பொதுமக்கள் ஒருவரிடம் தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக அதனை எடுத்த அமைச்சர் அந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வட சென்னை பகுதிக்கு உட்பட்ட கொருக்குபேட்டை துணை மின் அலுவலகத்திற்கு விரைந்தார்.

அமைச்சரின் வருகையை சற்றும் எதிபாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போயினர். திடீர் ஆய்வின்போது மதுபோதையில் பணியிலிருந்த ஜெகன் என்ற ஊழியரை பணி இடை நீக்கம் செய்யவும் அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். மேலும் தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட கருணாநிதி நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிந்த அமைச்சர் அந்தப் பகுதியில் நடைபெற்ற மின் இணைப்பு சரி செய்யும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் அவ்வப்போது இந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.