ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி

 

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி

அதிமுக ஆட்சிகாலத்தில் 7 ரூபாய் ஒரு பைசாவுக்கு வாங்கப்பட்ட மின்சாரம் திமுக ஆட்சிக்காலத்தில் 2 ரூபாய் 61 பைசாவுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என சொல்லும் முந்தைய ஆட்சியாளர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார். வரும் காலங்களில் ஒருரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு ஏற்படுத்தப்படும். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அனல்மின் நிலையங்கள் மூலம் 85 சதவிகிதமாக இருந்த மின் உற்பத்தி அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 ல் 78 சதவிகிதமாக குறைந்ததாகவும், 2016 முதல்2021 வரை 58 சதவிகிதமாக குறைந்ததாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இந்த உற்பத்தி ஏன் குறைக்கப்பட்டது ஏன் எனவும் தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்காகதான் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்குவதில் குறுகிய கால ஒப்பந்தம் போடாமல் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் வெளியிலிருந்து 7 ரூபாய் 1 பைசாவுக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழ்நாடு எரிசக்தி கழகம் மூலமாகவே 2 ரூபாய் 61 பைசாவுக்கு வாங்க திமுக அரசு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் மூலமாகவே மின் உற்பத்தியை பெருக்குவதே அரசின் இலக்கு எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்