“வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை” – செங்கோட்டையன்

“வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை” – செங்கோட்டையன்

ஈரோடு

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை விற்பனை செய்ய துணைபோகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்திது பேசினார்.

“வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை” – செங்கோட்டையன்

அப்போது, ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 22 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு, டெல்டா விவசயிகளுக்காக வேளாண் சிறப்பு மண்டலம் அமைக்கப்பட்டதா தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், முழுமையாக விவசாயிகளுக்கான அரசாக தமிழக அரசு திகழ்வதாகவும் தெரிவித்தார்.

“வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை” – செங்கோட்டையன்

தொடர்ந்து பேசிய அவர், கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தடுக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அத்துடன், வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை அதிகாரிகள் விற்பனை செய்ய துணை போனால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்த செங்கோட்டையன், அவ்வாறு வியாபாரிகள் கொண்டு வரும் நெல் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.