“இலவச கட்டாய கல்விக்கான நிதியை இன்றே வழங்க உத்தரவு” – செங்கோட்டையன்

 

“இலவச கட்டாய கல்விக்கான நிதியை இன்றே வழங்க உத்தரவு” – செங்கோட்டையன்

திருவள்ளூர்

தனியார் பள்ளிகளில், இலவச கட்டாய கல்வித்திட்டத்தின் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான நிதியை இன்றே வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவேற்காட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 118 நர்சரி, பிரைமரி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அங்கீகார ஆணையை வழங்கினார்.

“இலவச கட்டாய கல்விக்கான நிதியை இன்றே வழங்க உத்தரவு” – செங்கோட்டையன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளை நடத்துபவர்களுக்கு, இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் ரூ.375 கோடி வழங்க வேண்டும் என்றும், ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்து, இந்த பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களோ, அதற்கேற்ப நிதி வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், இந்த நிதியை, இன்றே வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து தேர்வுகளையும் சந்திக்கும் அளவிற்கு பாடத்திட்டங்கள் அமைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், 7 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர முதலமைச்சர் நடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அதிக கட்டணம் வசூலித்த  14 பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.