மதிப்பெண்ணை திருத்தினால் நடவடிக்கை! – பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

 

மதிப்பெண்ணை திருத்தினால் நடவடிக்கை! – பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டால் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரக்கைவிடுத்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், காலாண்டு, அரையாண்டு, வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்க கணக்கீடு ஒன்றையும் வழங்கியது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணைத் திருத்துவதாக புகார் எழுந்தது.

மதிப்பெண்ணை திருத்தினால் நடவடிக்கை! – பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கைஇந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொங்கார் பாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் ஓடையில் ரூ.3.67 கோடி மதிப்பில் நடந்து வரும் தடுப்பணை கட்டும் பணியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்ய வந்தார். அவரிடம் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் முறைகேடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் எங்களிடம் உள்ளன. எனவே, முறைகேடு நடந்தால் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.