“இது தந்தை பெரியார் பிறந்த மண்; எவராலும் நுழைந்து விடமுடியாது” – அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்!

“இது தந்தை பெரியார் பிறந்த மண்; எவராலும் நுழைந்து விடமுடியாது” – அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்!

திராவிட மண்ணில் எவராலும் நுழைந்து விடமுடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“இது தந்தை பெரியார் பிறந்த மண்; எவராலும் நுழைந்து விடமுடியாது” – அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் , முதல்வர் பழனிசாமி என்று முடிவெடுத்த நிலையில் அதை, பாஜக தான் முடிவு செய்யும் என பிடிவாதம் பிடித்தது பாஜக தலைமை. இதை தொடர்ந்து பாஜகவுடன் கட்சி ஆரம்பித்து கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த ரஜினி, அரசியல் ரேஸில் இருந்து பின்வாங்கினார். இதனால் தமிழகத்தில் அதிமுகபெரிய கட்சி, பாஜக சிறிய கட்சி; அதனால் முதல்வர் வேட்பாளரை அதிமுக தான் முடிவு செய்யும் என்று பாஜக அறிவித்தது. இருப்பினும் அதிமுகவின் துணையுடன் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் பாஜக, சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது.

“இது தந்தை பெரியார் பிறந்த மண்; எவராலும் நுழைந்து விடமுடியாது” – அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்!

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிட மண்ணில் யாராலும் திராவிட இயக்கத்தை அசைத்து விட முடியாது; இது தந்தை பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மண்; நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாண்புமிகு அம்மாவால் தீமையகற்றபட்ட மண்; இம்மண்ணிலே எவராலும் நுழைந்து விடமுடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன் , திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது