தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் தான் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் தான் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் தான் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

இந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் வரும் திங்கள்கிழமை முதல் டிவி வாயிலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து அரசு அட்டவணை வெளியிட உள்ளது என்றும் கூறினார்.