10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது ? – அமைச்சர் பதில்!

 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது ? – அமைச்சர் பதில்!

தமிழகத்தில் கொரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த மாதம் 19ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவிருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது ? – அமைச்சர் பதில்!

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் இடைநிற்றல் கிடையாது. அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக நடைபெறுகிறது. மாணவர்களுக்கு கற்றல் தினம் குறைபாடு கிடையாது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு அறைக்கு 25 பேர் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்து முடிந்த பிறகே தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.