விருப்பமிருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் : அமைச்சர் செங்கோட்டையன்

 

விருப்பமிருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் : அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டதை போல, கடந்த ஜன.19ம் தேதி பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பள்ளிகள் திறக்கப்பட்டது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மாணவர்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

விருப்பமிருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் : அமைச்சர் செங்கோட்டையன்

இதைத் தொடர்ந்து, வரும் பிப்.8ம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்தது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்களின் கடிதத்துடன் தான் வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் கல்வி சிறக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றும் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்றும் தெரிவித்தார்.

விருப்பமிருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் : அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து பேசிய செங்கோட்டையன், தேர்தல் நேரங்களில் தான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும்; ஆனால் முதல்வர் சட்டமன்றத்திலேயே இதனை அறிவித்து விட்டார் என்றும் தெரிவித்தார்.