ஜெயலலிதா சுற்றுப்பயணத்திற்காக ‘தங்க தாரகையே’ பாடலை பாடிய எஸ்பிபி! செங்கோட்டையன் நெகிழ்ச்சி

 

ஜெயலலிதா சுற்றுப்பயணத்திற்காக ‘தங்க தாரகையே’ பாடலை பாடிய எஸ்பிபி! செங்கோட்டையன் நெகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலிங்கியம், மொடச்சூர் கோட்டுபுள்ளம்பாளையம், அளுக்குளி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கான்கிரீட் சாலைகளுக்கான பூமி பூஜை மற்றும் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

ஜெயலலிதா சுற்றுப்பயணத்திற்காக ‘தங்க தாரகையே’ பாடலை பாடிய எஸ்பிபி! செங்கோட்டையன் நெகிழ்ச்சி

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “எஸ்பிபி இழப்பு இந்தியாக்கு ஒரு இழப்பு. 14 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை அந்தந்த மொழி உணர்வுக்கு ஏற்ப பாடல்களை பாடி இந்திய மண்ணில் அவர் மறைந்துள்ளார். இசையுலகில் என்றும் நிலைத்திருப்பார். அரை நூற்றாண்டு காலம் திரை உலகில் இந்திய நாடு வியக்கத்தக்க வைத்தவர்.

ஜெயலலிதாவிற்காகவும் பாடல் பாடியவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாளில் அவரது பாடல் பாடப்பட்டது. ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தில் எஸ்பிபி பாடிய தங்கதாரகையே வருக பாடல் பாடப்பட்டது. இந்தியாவில் அரசியல் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அவரது பாடல் பாடப்பட்டது வரலாறு. எஸ்பிபி இந்த மண் உலகை விட்டு பிரிந்தாலும் இசை உலகில் என்றும் நிலைத்து இருப்பார்” எனக் கூறினார்.