நீட் தேர்வை ரத்து செய்வதே அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 

நீட் தேர்வை ரத்து செய்வதே அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கையாக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த தேர்வை முடியாது என தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு அஞ்சியே தான் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ பதிவு செய்த துர்கா, 6 பக்க அளவிலான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார்.

நீட் தேர்வை ரத்து செய்வதே அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இவ்வாறு மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்வதால், இந்த தேர்வுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை என கூறினார்.

மேலும், 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக எனக்கு எந்த செய்தியும் வரவில்லை என்றும் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதால் இந்த முறை ரூ.13.84 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .