நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வு முகமை தெரிவித்து விட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரையில் சென்ற நிலையிலும், மாணவர்களுக்கு சாதகமாக எந்த முடிவும் வழங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பீதியில் மாணவர்கள் எப்படி தேர்வுகளை எதிர்கொள்ள போகிறார்கள் என கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என தெரிவித்தார். மேலும், 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.