நீட் தேர்வில் 75% கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன – அமைச்சர் செங்கோட்டையன்

 

நீட் தேர்வில் 75% கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன – அமைச்சர் செங்கோட்டையன்

சிவகங்கை அருகே சக்கந்தி அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமராக்கியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “திருக்குறள் பாட நூல் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து தற்போது பரிசீலிப்பதற்கில்லை. போதிய நிதி ஆதாரமும் இல்லை. கூடிய விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் உள்ள நீட் பயிற்சி மையத்தை, கல்வி மாவட்ட அளவில் அமைக்க முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தான் வினாத்தாள் அமைக்கப்படும். அதிலிருந்துதான் கேள்விகளும் எழுப்பப்படும்.

நீட் தேர்வில் 75% கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன – அமைச்சர் செங்கோட்டையன்

உடற்கல்வி ஆசிரியர் பணி நிரப்பப்பட்டு வருகிறது. முழுமையடைந்த பின் மாணவர்களுக்கு இலவசமாக உடற்கல்வி பாடநூல் வழங்கப்படும், மடிக்கணிணி அதிகமாக வழங்கப்பட்ட மாநிலம் தமிழகம். பொருளாதார நெருக்கடியின் போது கூட 2 கோடியே 17 லட்சம் பேருக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அரசர் காலத்தில் மட்டுமே இருந்த குடிமராமத்து பணி தற்போது அம்மா அரசில் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா கால உயிரிழப்பு தமிழகத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. வருகிற ஆண்டில் மாணவ, மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வில் கேட்கப்படும் 75% கேள்விகள் தமிழ்நாட்டு பாடதிட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தமிழக அரசுக்கு பெருமை. தமிழக அரசின் தொலை நோக்கு திட்டத்தால் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணிகளை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். ஆசிரியர் தேர்வு மையத்தின் மூலம் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.7 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர் அவர்களுக்கும் பணி வழங்கி வருகிறோம். வெயிட்டேஜில் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதிக்குள் அட்டவணை வெளியிடப்பட்டு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தேவைக்கேற்ப பணிகள் வழங்கப்படும்” எனக் கூறினார்.