“கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு! திமுகவுக்கு ஆப்பு இருக்கு”

 

“கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு! திமுகவுக்கு ஆப்பு இருக்கு”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் அதிமுக கட்சியின் ஈரோடு புறநகா் மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், “மொழிப்போா் தியாகி இருமொழி கொள்கை தான் தமிழ்நாட்டிற்கு தேவை என்பது தான் அனைவரது கொள்கை. அதற்காக உயிா் நீத்த மாணவா்களை நினைவுக்கூறும் விதமாக வீரவணக்க நாள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இது திராவிடத்தை ஏற்றுக்கொள்ளும் மண் அதேபோல் இருமொழி கொள்கையை மட்டுமே ஏற்றுகொள்ளும் மண் தான் தமிழகம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவும் இருமொழி கொள்கைக்காகதான் குரல் கொடுத்தாா்.

முதல்வா் எடப்பாடியும் இருமொழிக்கொள்கைதான் தேவை என்றும் மும்மொழிக்கொள்ளை தேவையில்லை எனவும் சட்டமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினார். 1980ஆம் ஆண்டு எம்.ஜி.ஆா் பேறுப்பேற்றபோது கையில் கயிறு கொண்டு வந்தால் எந்த கிணற்றில் வேண்டுமானாலும் தண்ணீா் எடுத்துக்கொள்ளலாம் என திட்டத்தை கொண்டுவந்தாா். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது. உலகத்தில் உள்ள அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்டவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மட்டும் தான். அம்மா மனிதநேயமிக்க தலைவி. தமிழக மக்களை பசியில்லா மக்களாக பேணிக்காத்தவா் ஜெயலலிதா. யாரும் சிந்திக்க முடியாத திட்டங்களை கொண்டுவந்தவா் ஜெயலலிதா. விலையில்லா திட்டங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை.

“கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு! திமுகவுக்கு ஆப்பு இருக்கு”

அண்டை மாநிலங்களில் மடிகணினி வழங்கப்பட்டுள்ளதா என்று மக்கள் எண்ணிப்பாா்க்க வேண்டும்… இந்த அரசு சீரோடும் சிறப்போடு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றறதற்கு பிறகு சீறுடைகள் மாற்றியமைக்கப்ட்டுள்ளது. ரேங் சிஸ்டம் ஒழிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.சியால் கூட தமிழக பாடத்திட்டத்தை போல் உருவாக்க முடியவில்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கட்டப்பஞ்சாயத்து இல்லை, கட்டாய வசூல் இல்லை. ஜெயலலிதா பொறுப்பேற்றத்கு பிறகு தீவிரவாதம் அறவோடு இல்லை. தனிமனித சுதந்திரம் காக்கும் அரசு அதிமுக அரசு. கேட்காமலே கொடுக்கிற அரசுதான் எடப்பாடி அரசு. பொங்கல் பரிசு, மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு இது எல்லாம் தோ்தல் வாக்குறுதிகளா இல்லையே… திமுக தோ்தல் களத்தில் வந்தவுடன் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி என்று அறிவிக்கின்றாா்கள். எங்களது அறிவிப்பை பாருங்கள் அவா்களுக்கு பெரிய ஆப்பு ஆடிக்கப்போகிறோம் நாங்கள் கொடுத்தபிறகு நீங்கள் எழுந்திருக்க முடியுமா என்று பாருங்கள். இந்த தேர்தலிலும் அதற்கு பிறகு வருகிற தோ்தல்களிலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வா்” எனக் கூறினார்.