பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்?

 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்?

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் அரசு அறிவித்த நாட்களில் விடுமுறை விடப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் 92 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள். எப்போதும் 60 நாட்களுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும். அப்படி அறிவித்தவுடன் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மீதமுள்ள வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும். தற்போது உள்ள வேலை நாட்களில் 60 சதவீதம் பாடத்தை நடத்த முடியாது என கல்வியாளர்கள் கூறுகின்றனர். நீட்தேர்வு பயிற்சி மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் மாலை 6 முதல் 8 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும், 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நன்றாக படித்து சிறந்த கல்வி பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.” எனக் கூறினார்.