திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

 

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர், இலக்கிய அணி செயலாளர், பாட நூல்கழக தலைவர் பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “25 வயது நிரம்பும்போதே தேர்தலில் போட்டியிட இடம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். சிறுவயதாக அப்போது இருந்த போது 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் காலில் விழுந்து வாக்கு கேட்டேன். இது திராவிட மண்; இங்கு யாராலும் திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க முடியாது. சிலர் நினைக்கிறார்கள், திராவிட இயக்கத்தை அசைத்துப்பார்க்கலாம் என்று, ஆனால் அது முடியாது. யாராலும் இங்கு நுழையமுடியாது. ஏதாவது இடர்பாடுகள் வருமா? என்று நரி காத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் இடர்பாடுகள் வருவதற்கு நரிக்கு காலம் இடம் கொடுக்காது என தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

ஒரு பெண்னை எப்படி மதிக்க வேண்டும், ஒரு முதல்வரை எப்படி மதிக்க வேண்டும் என உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும். நாகரீத்தோடு பேசுங்கள், ஏனென்றால் நாகரீகத்தை கொண்டு வந்த இயக்கம் திராவிட இயக்கம். அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு பின் திமுக இருக்கிறதா? இல்லையா என்று பாருங்கள் என முதல்வர் எங்களிடம் சொன்னார். அவர் எதையோ மனதில் வைத்துள்ளார். பொங்கலுக்கு நாங்களெல்லாம் 2000 கொடுக்க சொன்னோம் ஆனால் முதல்வர் 2500 கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என பேசினார்.