இந்த ஆண்டு பூஜ்யம் கல்வியாண்டு? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வியாண்டு? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், “உலகமே கொரோனா அச்சறுத்தலில் உள்ள நிலையில், சுகாதாரத்தை பேணி காக்கும் சுகாதாரத்துறையை பிரதமா் பாராட்டி உள்னாா். நாட்டின் நலன் கருதி இன்னும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. அனைத்து மக்களுக்கும் நல்லொழுக்கத்தோடு வாழ்வதற்கும் மத ஒற்றுமையோடு வாழ்வதற்கும் மூன்று ஆலயங்களுக்கு சென்று முதல்வா் வழிபாடு செய்துள்ளார். ஆன்மீக வாதிகளும் திராவிட வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக உள்ளது.

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வியாண்டு? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

அடுத்தாண்டு அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் 7.5 சதவிகித இடஇதுக்கீடு அமுல்படுத்தப்படுவது குறித்து முதல்வரும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் தான் முடிவு செய்யவேண்டும். இந்தாண்டு தொடா்ந்து பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படுவது குறித்து முதல்வருடன் கலந்து பேசியற்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும். சூழ்நிலைக்கேற்ப முதல்வா் அறிவிக்கும் முடிவை பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்தும். முதல்வாிடம்
கருத்துகள் பாிமாறியதற்கு பிறகு முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். படிப்படியாக ஆசிாியா்களுக்கு ஸ்மாா்ட்டு காா்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 64 கோடியில் அம்மா விளையாட்டு மைதானங்கள் அடுத்தாண்டு ஜனவாி மாதம் நிறைவு செய்யப்படும், தற்போது கட்டுமானப்பணிகள் 75 சதவிதங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.