பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கப்படுவது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

 

பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கப்படுவது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், “பிரசிதி பெற்ற கோபிச்செட்டிப்பாளையம் பாரியூர் குண்டம் திருவிழா கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலைதுறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கப்படுவது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

இதனையடுத்து அர்ச்சகர்கள் மற்றும் பணிசெய்யும் 300பேர் பங்கேற்று நடத்திக்கொள்ளலாம் எனவும் கோவிலில் கொரோனா விதிமுறைகள் படி தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தரிசனம் செய்யமட்டுமே அனுமதி எப்றும் குண்டம் இறங்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக பொங்கல் பரிசு ரூ2,500 ரூபாய் கொடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது. நிவர் புயல், கொரோனா தொற்று பரவல் போன்ற காரணங்களுக்காக பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படுகிறது” எனக் கூறினார்