6- 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு டேப்- அமைச்சர் செங்கோட்டையன்

 

6- 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு டேப்- அமைச்சர் செங்கோட்டையன்

திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி & பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களை சேர்ந்த 360 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

6- 8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு டேப்- அமைச்சர் செங்கோட்டையன்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “60 சதவிகிதம் ஏழை மாணவர்கள் கல்வி பெற காரணம் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம், இத்திட்டம் அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் ஆட்சியிலும் தொடர்கிறது. தமிழக முதல்வர் 52இலட்சத்து 42 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியுள்ளார். இந்த ஆட்சி வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருகிறது. மழை கூடுதலாக பெய்தாலும் கூட குடிமராத்து பணி காரணமாக மழைநீர் சேகரிபட்டு உள்ளது. ஆகையால் வெள்ள சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக பாடபுத்தகம் தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஜனவரி 15 தேதிக்குள் அரசு பள்ளிகளுக்கு 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும், 6 முதல் 8வரை அரசு பள்ளியில் கல்வி பயில கூடிய மாணவ மாணவியர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.