இந்த மாதம் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

 

இந்த மாதம் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கடந்த 8 மாத காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய்கொண்டிருக்கிறது.

இந்த மாதம் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். பாலாறு, நீலமங்கலம், வெள்ள கொண்ட அகரம், வெண்ணாங்குபட்டு ஆகிய பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து வெள்ளை கொண்ட அகரம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “இந்த மாதம் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியமில்லை. பள்ளி திறப்பதற்கான முடிவை முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்வோம்” என தெரிவித்தார்