ஆ.ராசாவின் சவாலுக்கு தயார் – அமைச்சர் செங்கோட்டையன்

 

ஆ.ராசாவின் சவாலுக்கு தயார் – அமைச்சர் செங்கோட்டையன்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி கடந்த வியாழக்கிழமை அன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாகவும், அவர்கள் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஆ.ராசாவின் சவாலுக்கு தயார் – அமைச்சர் செங்கோட்டையன்

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்றும் முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க முதலமைச்சர் தயாரா? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவை பொறுத்தவரை இந்த அரசு யார் வேண்டுமானாலும் இன்று விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் எதையும் சந்திப்பதற்கு எந்த நிலையிலும், எந்த சவாலையும் சந்திப்பதற்கு அதிமுக தயக்கம் காட்டாது. எந்த சவாலையும் அந்தந்த துறை அமைச்சர்களும் சந்திக்க தயாராக இருக்கிறோம். இன்றைய தினத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பிறகு முதலமைச்சர் முடிவு செய்வார். 2021ல் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பதவியேற்பார்” எனக் கூறினார்.