பள்ளிக்கல்வித்துறை பற்றி குறை கூறுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா? – அமைச்சர் செங்கோட்டையன்

 

பள்ளிக்கல்வித்துறை பற்றி குறை கூறுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா? – அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தமிழக ஹயர்கூட்ஸ் அசோசேசன் சார்பாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஏற்கனவே 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நாட்கள் குறைந்து கொண்டே வருவதால் மேலும் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. அரசு மாணவர்கள் மருத்துவ படிப்பை அரசே ஏற்பதால் ஆண்டுக்கு 16 கோடி செலவு செய்யப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் எதுவாக இருந்தாலும் உணவு, தங்குமிடம், படிப்பு என முற்றிலும் இலவசம்.

பள்ளிக்கல்வித்துறை பற்றி குறை கூறுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா? – அமைச்சர் செங்கோட்டையன்

திமுக ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு உபயோகமாக இருந்ததா.? 5 மட்டும் 8 பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன் தெரியுமா? மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கருந்து கேட்டு அனைவரும் பொதுத்தேர்வு நடத்த விருப்பம் தெரிவிக்கவில்லை அதனால் மட்டுமே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்துகாகவும் மிரட்டலுகாகவும் ரத்து செய்யப்படவில்லை. பள்ளி கல்வித்துறை பற்றி கூறை கூறுபவர்கள் நேருக்கு நேர் வாதிட தயாரா? ஜாதி, கயிறு மாணவர்கள் கட்டக்கூட்டாது என பள்ளிக்கல்வித்துறை சார்பாக எந்த அறிக்கை அனுப்பப்படவில்லை” எனக் கூறினார்.