ஒருபக்கம் கொரோனா; மறுபக்கம் மழை!பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 

ஒருபக்கம் கொரோனா; மறுபக்கம் மழை!பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கொரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கிறது. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் இருந்தாலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையிலும், எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

ஒருபக்கம் கொரோனா; மறுபக்கம் மழை!பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவக் கல்வி பயிலும் வகையில் முதலமைச்சரின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலாகும்பட்சத்தில் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதலமைச்சர் வருவாய் துறை , சுகாதாரத்துறை , பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து பின் முடிவை அறிவிப்பார் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். பள்ளிகள் திறப்பதில் உள்ள சிக்கல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது” எனக் கூறினார்.